/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 02, 2025 01:27 AM

கோவை: அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 12வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, 'தாட்வர்க்ஸ்' நிறுவனத்தின், நிகிதா ஜெய்ன் மற்றும் நேபாள துாதரகத்தின் கலாசார ஆலோசகர் கோகுல் பாஸ்னேட் ஆகியோர் பங்கேற்றனர். விருந்தினர்கள் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தனர்.
விழாவில், 955 இளநிலை மாணவர்கள், 51 முதுநிலை மாணவர்கள் மற்றும் நான்கு முனைவர் பட்டதாரிகள் என ஆயிரத்து 10 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரியளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் சந்திரகவுரி, கோகிலா, தீபிகா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு துறையிலும், தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.