/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகள போட்டியில் கே.பி.ஆர்., அணி முதலிடம்; மாணவியர் பிரிவில் எஸ்.எஸ்.ஐ.இ.டி., 'டாப்'

ADDED : நவ 19, 2024 11:48 PM

கோவை ; இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டியில் மாணவர் பிரிவில், கே.பி.ஆர்., மாணவியர் பிரிவில் எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரிமுதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலை, 9வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. இதில், 15 கல்லுாரிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வட்டு எறிதல், மாரத்தான், 10 கி.மீ., நடைப்போட்டி, 400 மீ., ஓட்டம் என, பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் நிறைவில், மாணவர்கள் பிரிவில், 151.5 புள்ளிகளுடன்கே.பிஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடத்தை, 82.5 புள்ளிகளுடன் ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும்(எஸ்.எஸ்.ஐ.இ.டி.,), 49.5 புள்ளிகளுடன் சி.ஐ.டி., கல்லுாரி மூன்றாம் இடமும் பிடித்தன.
மாணவியர் பிரிவில், 97.5 புள்ளிகளுடன் எஸ்.எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி முதலிடமும், 73.5 புள்ளிகளுடன் சி.ஐ.டி., கல்லுாரி இரண்டாம் இடமும், 63 புள்ளிகளுடன் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மூன்றாம் இடமும் பிடித்தன.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற அணிகளுக்கு சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் சம்பத் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.