UPDATED : அக் 30, 2026 09:26 PM
ADDED : அக் 30, 2026 09:24 PM
காலம் காலமாக டாப் 10 ஸ்வீட்ஸ் லிஸ்டில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது மைசூர்பாக்.
கால் நூற்றாண்டுக்கு முன்புவரை அது காமெடி கிங் மகுடமும் சூடி இருந்தது. மைசூர்பாக் என்றால் கடிக்கவே முடியாத அளவுக்கு கடினமான இனிப்பு பலகாரம் என்று பரவலான கருத்து நிலவியது அப்போது.
காலில் பெரிய பேண்டேஜ் போட்டவரை நண்பர் கேட்பார்: என்னாச்சு?
பேண்டேஜ்காரர் பதில்: மைசூர்பாக்கை சுத்தியலால் உடைக்கும்போது, ஒரு பீஸ் காலில் விழுந்துவிட்டது.
கடினம் தவிர இல்லத்தரசிகளை கிண்டல் செய்யும் ஜோக்குகளிலும் மைசூர்பாக் தவறாமல் இடம் பிடிக்கும்.
அந்த வரலாறையே மாற்றி எழுதியது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.
வல்லினமான க் கை தள்ளிவிட்டு, நாக்கில் வைத்ததுமே கரைந்து வயிற்றுக்குள் இறங்கும் மெல்லினமாக மாற்றியது. மைசூர்பாக் மைசூர்பா ஆனது.
புது வரலாறு படைத்தது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்.
