தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநில அளவிலான கிரிக்கெட்:  பைனலில் கிருஷ்ணா, சி.எம்.எஸ்.,

மாநில அளவிலான கிரிக்கெட்:  பைனலில் கிருஷ்ணா, சி.எம்.எஸ்.,

மாநில அளவிலான கிரிக்கெட்:  பைனலில் கிருஷ்ணா, சி.எம்.எஸ்.,


ADDED : பிப் 13, 2024 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.

இதில் 14 அணிகள், நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இதன் அரையிறுதிப்போட்டி நேற்று நடந்தது. முதல் அரையிறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 18.4 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சி.எம்.எஸ்., கல்லுாரி அணியின் சஞ்சய், ஐந்து விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய அந்த அணியின் பிரபாகரன் (35) அதிரடியாக விளையாட, சி.எம்.எஸ்., அணி 13.1 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த கிருஷ்ணா கல்லுாரி அணிக்கு ராகுல் (46), கிருஷ்ணமூர்த்தி (71) ஆகியோர் கைகொடுக்க, கிருஷ்ணா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

என்.ஜி.பி., அணியின் சுரேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார். பைனலுக்கு தகுதி பெற 165 ரன்கள் தேவை என்ற இலக்குடன், களமிறங்கிய என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணியும் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us