/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 12, 2025 08:09 PM
சூலுார்; விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஆக., 16ம்தேதி நடுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது.
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சூலுார் அடுத்த நடுப்பாளையம் ஆதி விநாயகர் கோவிலில், ஆக., 16 ம்தேதி ஸ்தாபன தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது.
மாலை, 4:30 மணிக்கு,ஆதி விநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணர்,ராதை வேடம் அணிந்த குழந்தைகளின் ஊர்வலம் நடக்கிறது. முன்னதாக, 4:00 மணிக்கு நாக சுந்தரம் குழுவினரின் சிலம்பாட்டம் நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு, குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழா நடக்கிறது. அருள்ஜோதி தபோவன மூர்த்தி லிங்க தம்புரான் சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.
மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், சேவா பிரமுகர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் சண்முகநாதன், மாவட்ட இணை செயலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.