/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் விருது
/
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் விருது
ADDED : ஆக 12, 2025 08:09 PM

அன்னுார்; அன்னுாரில் உள்ள அமரர் ஏ.முத்துக் கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள், நல்லாசிரியர் விருதுகளை வழங்கினர்.
அன்னுாரில் அமரர் ஏ.முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 2024--25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதைப் பாராட்டி தலைமை ஆசிரியருக்கு தகைசால் விருதும், அனைத்து ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும், இப்பள்ளியில், 1974--75ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
இவ்விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன், பொருளாளர் நாராயணசாமி, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர். விழாவில், 47 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் விருதுகளை வழங்கினர். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் பலர், மத்திய, மாநில அரசு அதிகாரிகளாக பதவி வகித்து வருகின்றனர்.
முன்னணி தனியார் மருத்துவமனை, தனியார் கல்லூரிகளின் தாளாளராகவும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.