/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
/
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
ADDED : ஆக 13, 2025 09:54 PM

கோவை; பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில், முத்தமிழ் மன்றம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவின் துவக்கமாக, கிருஷ்ண பகவானுக்கு பூஜை மற்றும் யாகம் நடந்தது. தொடர்ந்து, பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், பூ, தண்ணீர் என, 9 வகையான நவாபிஷேகங்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
விழாவை சிறப்பிக்கும் விதமாக, கல்லுாரி வளாகத்தை சுற்றி கிருஷ்ண பகவானுடன் வலம் வந்த தேருக்கு தனி பூஜைகள் செய்யப்பட்டன. முதல்வர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் பங்கேற்றனர். உரை போட்டி, நடன நிகழ்ச்சி போன்றவை இடம்பெற்றன. நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.