/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : செப் 16, 2025 09:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி உற்வச விழா நடந்தது.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, மூலவர் பெருமாள், தாயாருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை,5:30 மணிக்கு மஹா மண்டபத்தில் பெருமாள், நாச்சியார்களுடன் திருமஞ்சன பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடக்கிறது.
சூளேஸ்வரன்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், காராள வம்சத்தின் ஆசிரியர் சிவக்குமார் தலைமையில், செந்துார் அழகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நெகமம், காட்டம்பட்டி ஊராட்சி, காட்டம்பட்டிபுதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், 28ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, நடந்தது.
இதில், சுவாமிக்கு ஊஞ்சல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், காட்டம்பட்டி புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இரவில் பஜனை மற்றும் உரியடிக்கும் நிகழ்வு மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.