/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம்
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம்
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம்
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம்
ADDED : ஆக 17, 2025 09:52 PM

- நிருபர் குழு-
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, எஸ்.எஸ்., கோவில் வீதி கரிவரத ராஜப்பெருமாள் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து குழந்தைகளின் ஊர்வலம் துவங்கப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் நிறைவடைந்தது. அதில், போடிபாளையம் ஸ்ம்பூர்ணானந்த தத்துவ ஞான சபை பூஜனிய ஸ்வாமி, ஹிந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதி விஷ்ணு பஜனை கோவிலில், கோகுலாஷ்டமி உறியடி உற்சவ விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, காலை, 7:15 மணிக்கு ேஹாமம், அபிேஷக ஆராதனை, மாலை, 5:00 மணிக்கு பஜனை குழுவினரின் பக்திபாடல்கள், இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம், இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், சிறப்பு அஷ்டாபி ேஷகம், 108 கோ பூஜை விழா, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விஷ்ணு பஜனை கோவில் குழுவினரின் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாராயணம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு உறியடி விழா, ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழுவினரின் சிறப்பு பஜனையுடன் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சாயரட்சை மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:00 மணிக்கு ஹரிஹரவாசனம், நடை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை ஆனைமலை தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு,7:00 மணிக்கு கண்ணபிரான் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு உறியடி மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
* ஆனைமலை அருகே கிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவலம்புரி சித்தி, புத்தி விநாயகர், ராகு,கேது, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, தசாவதார கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி அன்ன வாகனத்தில் வீதி உலா, அபிேஷக ஆராதனை, அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கீதையின் கண்ணன் என்ற தலைப்பில், பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகளின் சொற் பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை உடுமலை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா நேற்று துவங்கியது. தவழும் கண்ணன் அலங்காரத்தில் எம்பெருமாள் அருள்பாலித்தார்.
உடுமலை பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
நவநீத கிருஷ்ண சுவாமி, தவழும் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வரும், 25ம் தேதி வரை, தவளும் கண்ணன், வெண்ணை தாழிக்கண்ணன், பாலசோர கண்ணன், ஸ்ரீ வித்யா ராஜகோபாலன், கோவர்த்தன கிரிதாரி கண்ணன், உறியடி உற்சவம், காளிங்கநர்த்தன கண்ணன், விஸ்வரூபம் ஆகிய அலங்காரங்களில் தினமும் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 25ம் தேதி ஆண்டாள் ரங்கமன்னார் சேர்த்தி சேவையுடன், ஜெயந்தி உற்சவம் நிறைவு பெறுகிறது.
* உடுமலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி பெரியகடை வீதி ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் இருந்து, கிருஷ்ணர், ராதை மற்றும் கடவுள்கள் வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேஜஸ் மகாலில், உறியடி நிகழ்ச்சி, சத்சங்கம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* உடுமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்பாளை கண்ணனாக தரிசித்து வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.