
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஸ்தாபன தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா, இருகூர், கருமத்தம்பட்டி, கரவழி மாதப்பூர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நடுப்பாளையம் ஆதி விநாயகர் கோவிலில், நாக சுந்தரம் குழுவினரின் சிலம்பாட்டத்துடன் துவங்கியது. கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகளின் ஊர்வலத்தை கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். ஸ்தாபன தின விழா, பரிசளிப்பு விழாவில் மூர்த்தி லிங்க சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சேவா பிரமுகர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய நிர்வாகி அசோக்குமார், மாவட்ட இணை செயலாளர் தியாகராஜன், மாநில தர்ம பிரசார பிரமுகர் சுந்தரமூர்த்தி, சமூக சேவகர் ராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர்.
ஒன்றிய நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, செந்தில்குமார் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.