தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிருஷ்ணம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

 கிருஷ்ணம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

 கிருஷ்ணம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 06, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 2026ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடந்த விழாவில் செயலர் யசோதா, இயக்குனர் சதாசிவம் மற்றும் முதல்வர் ஹாரத்தி முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நடைபெற்ற காலை அமர்வில், குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் மனோகரன், முதுகலை பட்டப்படிப்பு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

இரண்டாவது அமர்வில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி ரஞ்சித் கிருஷ்ண பாய், அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வொக். பட்டப்படிப்பு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை முடித்த 3213 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us