/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி 9ம் இடம்
/
தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி 9ம் இடம்
தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி 9ம் இடம்
தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி 9ம் இடம்
ADDED : செப் 04, 2025 11:02 PM
கோவை: தேசிய தர மதிப்பீட்டு பட்டியல் நேற்று வெளியானது. இதில், கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அகில இந்திய அளவில் ஒன்பதாம் இடத்தை பிடித்தது.
இக்கல்லுாரித் தலைவர் நந்தினி ரங்கசாமி கூறியதாவது: கலை, அறிவியல் கல்லுாரிகள் பிரிவில், கிருஷ்ணம்மாள் கல்லுாரிக்கு ஒன்பதாமிடம் கிடைத்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து, 4,030 கல்லுாரிகளில் ஒன்பதாம் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக முதல், 10 இடங்களுக்குள் வருகிறோம். இது, பெருமைக்குரியது.
முதல்வர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கூட்டு முயற்சி. கற்பித்தல், ஆராய்ச்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இவ்விடம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 75.52 மதிப்பெண் பெற்றுள்ளோம். முதல் 10 இடங்களில் எங்களுடையது இரண்டாவது மகளிர் கல்லுாரி. இந்த தரவரிசை இடம் கிடைக்க எங்களது பாடத்திட்டம் மிக முக்கிய காரணம். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை வகுத்துள்ளோம்.
மாணவர்கள் படித்து முடித்து வெளியேறும்போது, தொழில் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கல்லுாரி அளவில் ஆராய்ச்சியில் இன்னும் முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதல் ஐந்து இடங்களை பிடிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும், 3 - 5 காப்புரிமைகளுக்கு விண்ணப்பிக்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.
கல்லுாரி முதல்வர் ஹாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.