/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகள சாம்பியன்ஷிப் வென்ற கிருஷ்ணம்மாள் மாணவியர்
/
தடகள சாம்பியன்ஷிப் வென்ற கிருஷ்ணம்மாள் மாணவியர்
ADDED : டிச 25, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான, 43வது தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 73 கல்லுாரிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் தடகள அணியானது ஏழு தங்கம், ஆறு வெள்ளி, ஐந்து வெண்கலம் வென்று, 127 புள்ளிகள் குவித்தனர்.
மாணவி மஹாதேவி அதிக புள்ளிகள் பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தடகள சாம்பியன்ஷிப் வென்ற மாணவியரை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

