ADDED : ஏப் 19, 2026 08:41 PM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறையில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த, கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை பூஜை மற்றும் அக்ஷயதிருதி அபிேஷக பூஜை நடந்தது.
காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 7:00 மணிக்கு இளநீர், பால், தயிர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
இதே போல் அண்ணாநகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று கிருத்திகை பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
