/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கிரிவலம்
/
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கிரிவலம்
ADDED : ஜன 21, 2024 11:52 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சஷ்டி வழிபாட்டு குழு சார்பில், பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலை சுற்றி காவடியுடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கிணத்துக்கடவு, சஷ்டி வழிபாட்டு குழு சார்பில் ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதை யொட்டி ஏராளமான பூஜைகள் நடப்பது வழக்கம்.
இதில், கடந்த 6ம் தேதி, சஷ்டி குழு சார்பில், ஈச்சனாரி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
7ம் தேதி, குருபூஜை நடந்தது. தொடர்ந்து 16ம் தேதி, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சஷ்டி பாராயணம் மற்றும் தை மாத சஷ்டி பூஜை நடந்தது.
20ம் தேதி, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து, வேல் மற்றும் காவடியுடன் கிரிவலம் வரப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று, (22ம் தேதி), கோவிலில் இறை வழிபாடு முடித்து பாதயாத்திரை துவங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.