/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 25, 2024 10:29 PM

கோவை : கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில், 2023-24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, இந்துஸ்தான் கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை கொங்கு நண்பர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இப்பாராட்டு விழாவில் பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, 400 மாணவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், துணைத்தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜன், இந்துஸ்தான் கல்விக்குழும செயலாளர் சரஸ்வதி கண்ணையன், திருப்பூர் டாலர் குரூப்ஸ் நிறுவன தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

