/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றவருக்கு பாராட்டு
/
சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றவருக்கு பாராட்டு
ADDED : பிப் 25, 2024 11:10 PM
கோவை;பொதுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற, சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற, அபூர்வாவிற்கு,கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள கனகராஜ் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடந்தது.
கோவை அரசு சட்டக்கல்லுாரியில், 2017-22 ல் சட்டப்படிப்பை முடித்த அபூர்வா, 2022ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.
பாராட்டு விழாவில், அபூர்வா பேசியதாவது:
முதல் முயற்சியில், நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றது மகிழச்சியாக உள்ளது. மாநில அளவில், 21வது ரேங்க் பெற்றுள்ளேன். பெற்றோர் எனக்கு ஊக்கமளித்தனர்; எல்லாவகையிலும் ஆதரவாக இருந்தனர். தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை தெரிந்து கொண்டு, திட்டமிட்டு புரிந்து படிக்க வேண்டும். நம்பிக்கையோடு, கவனமாக படித்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், போட்டித்தேர்வுக்கு படித்து வரும் மாணவர்களை ஊக்குவித்தார். கனகராஜ் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மைய தலைவர் கனகராஜ் மற்றும் போட்டித்தேர்வுகளில், பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர்.

