/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஜன 14, 2024 11:54 PM

கோவை:மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, பாராட்டு சான்றிதழை மாவட்ட எஸ்.பி., வழங்கினார்.
கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன், தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.,கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த, 2023-ம் ஆண்டில் ஒவ்வொரு பணியிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் முதல் போலீசார் வரை தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி., பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
இதில் ஒரு டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர்கள், 16 எஸ்.ஐ.,க்கள், 3 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 10 தலைமை காவலர், 7 முதல் நிலைக் காவலர், 34 போலீசார் என மொத்தம், 81 பேருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
எஸ்.பி., பத்ரிநாராயணன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விபத்துகளை குறைக்கும் பொருட்டும், போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.