/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
/
திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
ADDED : பிப் 22, 2024 10:51 PM
- நமது நிருபர் -
கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற விவாதிப்பு கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருள் விற்பனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்த, 5 இன்ஸ்பெக்டர்கள், 7 எஸ்.ஐ.,க்கள், 6 ஏட்டுக்கள், நான்கு முதல்நிலை போலீசார், 12 போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., பத்ரிநாராயணன் அறிவுறுத்தினார்.