/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு
/
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு
ADDED : பிப் 04, 2024 12:27 AM

கோவை:இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற, எழுத்தாளர் தேவிபாரதிக்கு, இன்று பாராட்டு விழா நடக்கிறது.
ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் தேவிபாரதி. இவரது இயற்பெயர் ராஜசேகரன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வரும் தமிழில் முக்கிய படைப்பாளி. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீர்வழிப் படூஉம், நொய்யல் ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். இதில் நீர்வழிப் படூஉம்' என்ற நாவலுக்கு, 2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெற்றுள்ள தேவி பாரதிக்கு, கோவையில் இன்று விஜயா பதிப்பகம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவில் கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயா பதிப்பகம் வேலாயுதம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். எழுத்தாளர் தேவிபாரதி ஏற்புரையாற்றுகிறார்.