/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரகுரு கல்லுாரிக்கு சர்வதேச அங்கீகாரம்
/
குமரகுரு கல்லுாரிக்கு சர்வதேச அங்கீகாரம்
ADDED : ஜூன் 26, 2025 11:29 PM
கோவை; குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனத்தின் கிளையாக செயல்படும் க்யூ.எஸ்., ஐ-கேக் அமைப்பிடம் இருந்து 'டைமண்ட்' தரநிலையைப் பெற்றுள்ளது.
இந்தியாவில், இக்கவுரவத்தை பெற்ற முதல் கலை அறிவியல் கல்லுாரியாக குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லுாரி உள்ளது.
கற்றல், கற்பித்தல், மாணவர்கள் செயல்பாடு, சிறந்த கல்வி செயல்பாடுகள், தரமான பாடத்திட்டம், தனிப்பட்ட வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நுாலகம், ஆய்வகம், உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உயரிய மதிப்பீடு பெற்றதால், இக்கவுரவம் கிடைத்துள்ளதாக கல்லுாரி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச கல்வி கூட்டணிகள், மாணவர்கள் பேராசிரியர் பரிமாற்றம், இணை ஆராய்ச்சி திட்டங்கள், ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி பெறும் வாய்ப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.