/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் போட்டியில் குமரகுரு கல்லுாரி வெற்றி; எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி இரண்டாம் இடம்
/
கிரிக்கெட் போட்டியில் குமரகுரு கல்லுாரி வெற்றி; எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி இரண்டாம் இடம்
கிரிக்கெட் போட்டியில் குமரகுரு கல்லுாரி வெற்றி; எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி இரண்டாம் இடம்
கிரிக்கெட் போட்டியில் குமரகுரு கல்லுாரி வெற்றி; எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி இரண்டாம் இடம்
ADDED : செப் 25, 2024 09:00 PM

கோவை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த, 20ம் தேதி துவங்கியது. அண்ணா பல்கலை மண்டல மைய மைதானத்தில் கடந்த, 22ம் தேதி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துவங்கின.
இதில், 15 அணிகள் பதிவு செய்திருந்தன. பல்வேறு போட்டிகளையடுத்து முதல் அரையிறுதியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியும் மோதின. ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 66 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, விளையாடிய எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி, 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 70 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியும், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணிகளும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 110 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்கள் இழப்புக்கு, 93 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த எஸ்.என்.எஸ்., கல்லுாரி, 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 90 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய குமரகுரு கல்லுாரி அணி, 15.5 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியும், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 101 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 75 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. வெற்றி பெற்ற அணியினருக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.
அண்ணா பல்கலை கோவை மண்டல மைய டீன் சரவணக்குமார், உடற்கல்வி இயக்குனர்கள் சிவசங்கர், சரவணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெற்றி பெற்ற அணிகள், மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளன.