/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 04, 2025 11:07 PM

கோவை: குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில், 2010 - 14ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 10 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.
'தி டிகேட் செலிபிரேஷன்' என்ற இந்த நிகழ்ச்சியில், 310 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து, வந்திருந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் பேசுகையில், ''முன்னாள் மாணவர்கள் அடுத்த, 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும். அனைவரும் தங்கள் தற்போதைய உத்தியைக் கொண்டு, தங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பாக இருக்க முடியும். தொடர் கற்றல் எண்ணங்கள், செயல்களில் புதுமை அவசியம்,'' என்றார்.
தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு, 'ரைசிங் ஸ்டார்' விருது வழங்கப்பட்டது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் முன்னாள் மாணவர்கள் இணைந்து, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்குவதற்காக, லேப்டாப் ஒன்றை வழங்கினர்.
முன்னதாக, குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி இணை டீன் தேவகி வரவேற்றார். முதல்வர் எழிலரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

