/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது குமரகுருபர சுவாமிகள் கவலை
/
தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது குமரகுருபர சுவாமிகள் கவலை
தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது குமரகுருபர சுவாமிகள் கவலை
தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது குமரகுருபர சுவாமிகள் கவலை
ADDED : ஜூன் 29, 2025 12:50 AM

கோவை : ராமானந்த அடிகள் கல்வி நிறுவனங்களில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.
கவுமார மடாலயத்தின் குமரகுருபர சாமிகள் பேசியதாவது:
மாநில அளவில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பெருமைக்கு உரியது. அறிவியல் தொழில்நுட்பத்தால் உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அதே சமயம், போர் பதட்டமான நிலையை உருவாக்கி உள்ளது. பல ஆயிரம் கி.மீ., அப்பால் ஒரு மனிதனை கொல்லும் வகையில், வளர்ச்சி பெற்றுள்ளது. உலக போரை உருவாக்கி மனித உயிர்களை அழித்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மனித குலத்துக்கு அச்சுறுத்தலை தவிர்த்து, அமைதியை அளிப்பதாக கல்வி இருக்க வேண்டும். தமிழ் வழி கல்வி அழியும் நிலையை நோக்கிச் செல்கிறது. இதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாணவர்களுக்கு துடியலூர் மணியன் குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. 99 மாணவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி கமலேஸ்வரி, வின்னர்ஸ் இந்தியா சார்பில், இரண்டு சென்ட் இடம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கே.பி.ஆர்., கல்வி குழுமங்களின் தமிழ் துறை தலைவர் அனுராதா, வின்னர்ஸ் இண்டியா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.