/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
/
குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
ADDED : ஜூலை 04, 2025 10:18 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, குமரன் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொள்ளாச்சி நகரப்பகுதிக்கு வந்து செல்லும் ரோட்டில், பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கு ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை, 10:00 மணி முதல் நாளை (6ம் தேதி) இரவு, 10:00 மணி வரை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக, வாகனங்களில் வருவோர் கவனத்துக்காக, அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. கேட் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பராமரிப்பு பணிக்காக, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் - சி.டி.சி., மேடு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பொள்ளாச்சிக்கு வர மாற்று வழித்தடத்தை பயன்படுத்தினர்.