/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் கோவிலில் 22ம் தேதி கும்பாபிேஷகம்
/
கற்பக விநாயகர் கோவிலில் 22ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : பிப் 16, 2024 12:12 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, நரசிங்காபுரம் கற்பக விநாயகர், மாகாளியம்மன், காலகாலேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.
வரும், 20ம் தேதி காலை, விநாயகர் பூஜை,இரவு, முதல் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.21ம் தேதி காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விமான கலசஸ்தாபிதம், யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, மூன்றாம் கால பூஜை, திருமுறை வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
வரும், 22ம் தேதி காலை, நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, பூர்ணாஹுதியும், காலை, 9:30 மணி முதல், 11:30 மணிக்குள், யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு, கற்பக விநாயகர், மாகாளியம்மன், காலகாலேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.
அன்று, மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி, 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை, 3:00 மணி வரை அன்னதானம் நடக்கிறது.