/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரகாளியம்மன் கோவிலில் வரும் 21ல் கும்பாபிேஷகம்
/
வீரகாளியம்மன் கோவிலில் வரும் 21ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 18, 2024 12:16 AM
உடுமலை : உடுமலை சின்னவீரம்பட்டி வீரகாளி அம்மன் கோவிலில், வரும் 21ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
உடுமலை சின்னவீரம்பட்டியில் வீரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா வரும் 20ம் தேதி துவங்குகிறது.
அன்று காலை, 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜை, நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கும்பாபிேஷக நிகழ்ச்சி வரும் 21ம் தேதி நடக்கிறது. அன்று, காலை, 9:15 மணி முதல் 10:30 மணிக்கு ஸ்துாபி கும்பாபிேஷகம், விநாயகர், வீரகாளியம்மன், பாலசுப்ரமணியர், குட்டைகாரன் சுவாமி, பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது.