நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:குரும்பபாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கும்ப அலங்காரம், முதற் கால யாக பூஜை, வேதபாராயணம் நடக்கிறது. இரவு 8 :00 மணிக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது, காலை 9:15 மணிக்கு, சக்தி விநாயகர் விமானங்களுக்கும், கோபுரத்திற்கும், புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, தச தரிசனம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.