ADDED : ஏப் 25, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார், தென்னம்பாளையம் சாலையில், பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நாளை (27ஆம் தேதி) ஆண்டு விழா நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு கணபதி பூஜை, 108 சங்கு பூஜை நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது.
அன்னதானம் வழங்கப்படுகிறது.

