/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
ஆதி செல்வவிநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மே 31, 2025 12:33 AM
அன்னுார் : குப்பனுார் ஊராட்சி, குன்னியூரில், ஆதி செல்வ விநாயகர் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா இன்று (31ம் தேதி) துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு கணபதி பூஜை, முதற்கால வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை, தச தரிசனம் நடைபெறுகிறது.