/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் கும்பாபிஷேகம்
/
ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 09, 2025 10:31 PM
மேட்டுப்பாளையம்; காரமடை கன்னார்பாளையம் சாலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா 7ம் தேதி குருபூஜையுடன் துவங்கியது. 8ம் தேதி காலை, 8:15 மணிக்கு சக்தி கொடி ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில், 21 யாகக் குண்டங்கள் அமைத்து, யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
நேற்று காலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. 7:00 லிருந்து, 7:30 மணிக்குள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட துணைத்தலைவர் செந்தில்குமார், கோபுர கலசத்திற்கும் மூலவர் மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் செவ்வாடை அணிந்த ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.