/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 02, 2025 10:00 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரத்தில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை காலை, 7:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, தனஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, கோபுர கலச ஸ்தாபனம் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 5:00 மணி அளவில் முதல் கால யாக பூஜையில், வாஸ்து சாந்தி ஹோமம், 108 மூலிகைகளுடன் காயத்ரி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 4:00 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தீபாராதனை, கலச புறப்பாடுகள் நடைபெற்றன. காலை , 6:00 மணிக்கு கோபுர விமான கலசம் மற்றும் மூலவர் கற்பக விநாயக மூர்த்திக்கு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.