/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
/
காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 31, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூர் காசி விஸ்வநாதர் கோவிலில், வரும், 9ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூரில் உள்ள விநாயகர், காசிவிஸ்வநாதர், சடையப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 8ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது.
வரும், 9ம் தேதி, காலை, 7:35 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச பூஜை, ருத்ரஹோமம், வேதபாராயணம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.