/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுர காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
மதுர காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : செப் 02, 2025 08:49 PM

அன்னுார்; மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (4ம் தேதி) நடக்கிறது.
அன்னுார், ஓதிமலை பாதையில், லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 31ம் தேதி காலை கோ பூஜையுடன் துவங்கியது.
மாலையில் பாசக் குட்டை செல்வ விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. இரவு வள்ளி முருகன் கலைக்குழுவின் திருக்குறள் கும்மி மற்றும் வள்ளி கும்மியாட்டம் நடந்தது.
நேற்று காலை மதுரகாளியம்மன் எழுந்தருளும் திருக்குடத்திற்கு வழிபாடு செய்யப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு நினைவு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
காலை 9: 30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும் மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், 9:45 மணிக்கு மூலவர் மதுரகாளியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் மடாதிபதிகள் அருளுரை வழங்குகின்றனர். மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலை 6:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.