/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரைவீரன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்
/
மதுரைவீரன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 24, 2025 10:33 PM
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையம் மதுரைவீரன் கோவிலில் வரும், மே 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.
பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள, பட்டத்தரசி அம்மன், மதுரைவீரன் உடனமர் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் மற்றும் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் விழா, வரும், மே 3ம் தேதி துவங்குகிறது.
அன்று, காலை 7:00 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரவேச பலி போன்றவை நடக்கிறது. மாலையில், தீர்த்தம் மற்றும் முளைப்பாளிகை ஆலயம் அழைத்து வரப்படுகிறது. அதன்பின், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு, முதற்கால வழிபாடு நடக்கிறது.
மே 4ம் தேதி, காலை 6:00 மணிக்கு, மூல மந்திர ஹோமம், நாடி சந்தனம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, யாத்ராதானம், கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடைகிறது. அதன்பின், மூலஸ்தான கோபுர கும்பாபிஷேகம், மூலஸ்தான மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

