/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 05, 2025 04:45 AM
அன்னுார்; அல்லிகுளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அல்லிகுளம், புது காலனியில், பல லட்சம் ரூபாய் செலவில், வர்ணம் தீட்டப்பட்டது. மேலும் இதே வளாகத்தில், செல்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிந்ததையடுத்து, கடந்த 3ம் தேதி காலை திருவிளக்கு பூஜை உடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, மாகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.