/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாளிகைப்புரத்து அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
மாளிகைப்புரத்து அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 28, 2025 04:02 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பெரிய நெகமத்தில், மாளிகைப்புரத்து அம்மன் மஞ்சள் மாதா கோவில் கும்பாபிேஷகம் வரும், 30ல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 18ம் தேதி முகூர்த்தக்கால் போடுதல், வேள்விச் சாலை முளைப்பாலிகையிடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தர்மசாஸ்தா மற்றும் மஞ்சள் மாதா கோவிலில் பந்தல்கால் போடுதல், விழாக் குழுவினருக்குகாப்பு நாண் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
வரும், 29ம் தேதி திருவிளக்கு, புனிதநீர், முளைப்பாலிகை உள்ளிட்ட வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்பின், காப்பு கட்டுதல் நடக்கிறது.
மாலையில், தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமி திருவீதி உலா, முதற்கால வேள்வி வழிபாடு, பேரொளி வழிபாடு, சுவாமி திருமேனிகளை பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 30ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, 7:00 மணிக்கு இரண்டாம்கால வேள்வி வழிபாடு, 108 மூலிகை திரவியாஹுதி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு மேல், கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு மகா அபிேஷகம், தசதரிசனம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.