/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
பேரூர் பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 24, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்;பேரூர் பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான, பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
இன்று, நான்காம் கால யாகசாலை பூஜை, கடங்கள் புறப்பாடு நடக்கிறது. அதன்பின், காலை, 9:55 மணி முதல் 10:55 மணிக்குள், பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

