/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
/
ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 14, 2024 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் காளியண்ணன்புதூர் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம், கடந்த 12ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது. 13ம் தேதி, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, விமான கோபுர ஸ்தாபனம், முதற்கால யாகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று, 14ம் தேதி, இரண்டாம் கால யாகம், வேதிகார்ச்சனை, பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, ராஜகணபதி விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் ராஜகணபதி பெருமாள் மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.