/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
/
செல்வ விநாயகர் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : டிச 01, 2024 11:45 PM
அன்னுார்; பொம்மம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில், வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குப்பனுார் ஊராட்சி, பொம்மம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா வரும் 3ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மாலை பவானி நதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்படுகிறது. வரும் 4ம் தேதி மாலை திருவிளக்கு ஏற்றுதலும், முதல் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. இரவு தெய்வ திருமேனிகளை பீடத்தில் நிறுவி எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது.
வரும் 5ம் தேதி காலை 8:30 மணிக்கு செல்வ விநாயகர் மற்றும் பட்டத்தரசி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகாபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.