/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடனமர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
உடனமர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 25, 2024 06:33 AM
போத்தனூர்: குரும்பபாளையத்திலுள்ள, பச்சை நாயகியம்மன் உடனமர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
மதுக்கரை அருகே குரும்பபாளையத்தில், குரும்பர் சமூக சாம குலத்தாரின் குல தெய்வமான பச்சை நாயகியம்மன் உடனமர் பட்டீஸ்வரர் கோவில், 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இதன் இரண்டாவது கும்பாபிஷேக விழா, 22ம் தேதி மாலை தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் துவங்கியது. தொடர்ந்து முதற்கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் நடந்தன.
இரண்டாம் நாள் திருப்பள்ளி எழுச்சி, நினைவு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாத்துதல், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன.
நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர், முருகன், தென்முக கடவுள், நான்முகன், சிவக்கொழுந்தீசர், துர்கை உள்ளிட்ட திருச்சுற்று தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை, 9:15 மணிக்கு மேல் பட்டீஸ்வரர், பச்சை நாயகி விமானங்களுக்கும், மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, பதின் மங்கல காட்சி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் மற்றும் அன்னதானம் நடந்தன. திரளானோர் அம்மனை தரிசித்து சென்றனர்.