/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவிலில் 27ல் கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் 27ல் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 22, 2025 11:44 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் பெரியவிநாயகர் கோவிலில் வரும், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, முத்துக்கவுண்டனூர் பெரியவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 26ம் தேதி துவங்குகிறது. மாலை 3:00 மணிக்கு, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது.
மாலை 5:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, முதற்கால வேள்வி, இரவு 9:00 மணிக்கு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கப்படுகிறது.
வரும், 27ம் தேதி, காலை 6:00 மணிக்கு, மங்கள இசை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 9:15 மணிக்கு வேள்வி நிறைவு மற்றும் பேரொளி வழிபாடு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு, பெரும் திருமஞ்சனம் நடக்கிறது.