/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவராம் நகர் பிரசன்ன விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
சிவராம் நகர் பிரசன்ன விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
சிவராம் நகர் பிரசன்ன விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
சிவராம் நகர் பிரசன்ன விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 12, 2025 01:16 AM
கோவை; ராமநாதபுரம், சுங்கம் பைபாஸ் சாலை, சிவராம் நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமிநாராயணன், ஆஞ்சநேயர், அய்யப்பசுவாமி, வள்ளி தேவசேனா உடனமர் முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம், நாளை காலை 7:00 மணியிலிருந்து 8:10 மணிக்குள் நடக்கிறது.
இன்று காலை 8:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கோபூஜை, கங்காபூஜை, யாகசாலை பிரவேசம் ஆகியவை நடக்கிறது.
நாளை காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு கலசயாத்திரை, மஹாகும்பாபிஷேகம், காலை 9:30 மணிக்கு தசதரிசனம், 10:00 மணிக்கு மஹா அன்னதானம் நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.