நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: அக்ரஹார சாமக்குளத்தில், விசாலாட்சி, சமேத, விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா வரும் 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை உடன் துவங்குகிறது.
வரும் மே 4ம் தேதி காலை 8:00 மணிக்கு, அனைத்து விமானங்களுக்கும், இதையடுத்து விசாலாட்சி அம்பாள் சமேதர விஸ்வேஸ்வர சுவாமிக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

