/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
பட்டத்தரசி அம்மன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
பட்டத்தரசி அம்மன் கோவிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 22, 2025 11:39 PM
அன்னுார், ; ஒட்டர்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.
இக்கோவில் வளாகத்தில் பால விநாயகர், பால முருகன், கன்னிமார், ஒச்சடையப்பன் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 29ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. அன்று வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதற்கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. இரவு 108 வகை ஹோம திரவியங்கள் வேள்வியில் சமர்ப்பிக்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 9:30 மணிக்கு விமான கோபுரத்திற்கும், இதையடுத்து பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மகாபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.  ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

