/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
/
ஆதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
ஆதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
ஆதீஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 30ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 25, 2025 11:30 PM
நெகமம்: நெகமம், பெரியகளந்தை, பெரியநாயகி உடனமர் ஆதீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், நேற்று துவங்கியது. இன்று, 26ம் தேதி, காலை நவகிரக ஹோமம், மகா சுதர்சன யாகம், லட்சுமி ஹோமம், தனபூஜை நடக்கிறது. மாலையில், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது.
27ம் தேதி, காலை கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. 28ம் தேதி, காலை பிரசன்னாபிஷேகம், யாகசாலை அலங்காரம் நடக்கிறது. மாலையில், முதற்கால வேள்வி நடக்கிறது.
வரும், 29ம் தேதி, காலை இரண்டாம் கால வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வியும், இரவு மூலமூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வு நடக்கிறது. 30ம் தேதி, காலை 5:00 மணிக்கு, நான்காம் கால கேள்வி, 7:00 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 8:30 மணிக்கு, யாகாலயத்திலிருந்து கலசங்கள் எழுந்தருளும் நிகழ்வும், காலை 9:00 மணிக்கு, மூலாலய விமான கலசங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.
அதன்பின், பெரியநாயகி உடனமர் ஆதிஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண கரிவரதராஜ பெருமாளுக்கு மகாகும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலையில், மஹாஅபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

