/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தி விநாயகர் கோயிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்
/
சித்தி விநாயகர் கோயிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 31, 2025 11:37 PM
அன்னுார்; குப்பேபாளையத்தில் ஜஹோரன்ஸ்கி நிறுவன வளாகத்தில், சித்தி விநாயகர் கோயில் உள்ளது. பல்வேறு திருப்பணிகள் செய்து வர்ணம் தீட்டப்பட்டது. கும்பாபிஷேக விழா, 3ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. அன்றிரவு ஐம்பூத வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு, அடியார்களுக்கு காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு செல்லுதல் ஆகியவை நடைபெறுகின்றன.
4ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. காலை 7.45க்கு விமானங்களுக்கும், இதையடுத்து மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்குகின்றனர்.