/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிேஷகம்
/
விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜன 31, 2025 11:24 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.
பொள்ளாச்சி திலகர் வீதி, ராமகிருஷ்ணாபுரம் வீதி செல்வசித்தி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை, 5:00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை புறப்பாடு, மங்களை இசை, பிள்ளையார் பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹுதி நடக்கிறது.
நாளை (2ம் தேதி) காலையில் மஹா கணபதி ேஹாமம், கடம் புறப்பாடு, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
* குமரன் நகர் வெற்றித்திருமுக விநாயகர் கோவிலில், நேற்றுமுன்தினம் முதற்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு விசேஷ சந்தி வழிபாடு, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், விமான கோபுர கலசங்கள் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில், விநாயகர் வழிபாடு, யந்திர ஸ்தாபனம், மூன்றாம் கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
நாளை காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, 10:00 மணிக்கு வெற்றித்திருமுக விநாயகர் விமான கும்பாபி ேஷகம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, மகா அபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.