/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர், முருகனுக்கு 7ல் கும்பாபிேஷகம்
/
விநாயகர், முருகனுக்கு 7ல் கும்பாபிேஷகம்
ADDED : செப் 01, 2025 10:43 PM
கோவை; ஒத்தக்கால்மண்டபம் விநாயகர், முருகன் கோவில் கும்பாபிஷேகம், 7ம் தேதி நடக்கிறது.
இதற்கான விழா, 4ம் தேதி மாலை 5 மணிக்கு, திருவிளக்கு, புனித நீர் வழிபாடுடன் துவங்குகிறது. 5ம் தேதி காலை 9 மணிக்கு, வேள்வி வழிபாடு, மாலை 6 மணிக்கு, முதல் கால வேள்வி, 6ம் தேதி காலை 6 மணிக்கு, பாவணாபிஷேகம், 8.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை 5 மணிக்கு காப்பணிதல் வழிபாடு, 6.30 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடக்கிறது. 8 மணிக்கு, கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வருதல், 8.30 மணிக்கு, கும்பாபிஷேகம், 8.45க்கு, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அன்னதானம், காலை 11.30 மணிக்கு, சிறப்பு அலங்கார பேரொளி வழிபாடு நடக்கின்றன. 8ம் தேதி முதல் 48 நாட்களுக்கு தினமும் இரவு 7 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.