/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்
/
பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்
பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்
பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 12:16 AM
அன்னுார்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், கொடிமரம் திருக்குட நீராட்டு விழா நாளை நடக்கிறது.
சாலையூரில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முன்புறம் கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து கொடிமரம் கும்பாபிஷேக விழா நாளை (5ம் தேதி) அதிகாலை 4 :30 மணிக்கு வேள்வி வழிபாடுடன் துவங்குகிறது. அதிகாலை 5:00 மணிக்கு கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
காலை 7:00 மணிக்கு தைப்பூசத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 8ம் தேதி கோவிலின் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வேள்வி பூஜையும், காலை 10:30 மணிக்கு மகாபிஷேகமும், 12:00 மணிக்கு அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும் நடக்கிறது.
விழாக்களில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.